search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான்"

    மத்தியப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் மந்திரியின் மைத்துனர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshElections #SanjaySinghMasani
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். ம.பி.யில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அங்கு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலை பாஜகவும், காங்கிரசும் வெளியிட்டுள்ளது. 



    இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் மந்திரியின் மைத்துனர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் மைத்துனர் சஞ்சய் சிங் மாசானி. இவர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் சவுகானின் மனைவி சாதனா சிங்கின் சகோதரர் ஆவார்.

    டெல்லியில் மத்தியப்பிரதேசம் காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் சஞ்சய் சிங் மாசானி, காங்கிரசில் இணைந்தார். அப்போது அவர் கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக செல்வந்தர்களின் நலனுக்காக உழைக்கும் மக்களை புறக்கணித்து வருகிறது என தெரிவித்தார். #MadhyaPradeshElections #SanjaySinghMasani
    மத்தியப்பிரதேசத்தில் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் கட்டிய வீடுகளில் பிரதமர் மோடி, முதல் மந்திரி சவுகான் ஆகியோரின் படங்கள் பதித்த டைல்ஸ்களை நீக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PMAY #Modi #ShivrajSinghChouhan
    போபால்:

    அனைவருக்கும் வீடு என்ற பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது 2022-ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்படுவதை நோக்கமாகக் கொண்டது.

    இந்த திட்டத்தின்படி மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  இந்த வீடுகளில் பிரதமர் மோடி மற்றும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரது படம் பதித்த டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.



    இதற்கிடையே, இந்த ஆண்டின் இறுதியில் ம.பி.யில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடுகளில் பதிக்கப்பட்டுள்ள மோடி, சவுகான் உருவங்கள் கொண்ட டைல்ஸ்களை அகற்ற வேண்டும் என குவாலியர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் கட்டிய வீடுகளில் பிரதமர் மோடி, முதல் மந்திரி சவுகான் ஆகியோரின் படங்கள் பதித்த டைல்ஸ்களை டிசம்பர் 20-ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். #PMAY #Modi #ShivrajSinghChouhan
    மத்தியப்பிரதேசத்தில் பயணம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கிரிக்கெட்டில் டெண்டுல்கர் ரன்களை அடித்து விளாசுவது போல் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்புகளை அள்ளி வீசுகிறார் என குற்றம் சாட்டினார். #RahulGandhi #ShivrajSinghChouhan #SachinTendulkar
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    உங்கள் அனைவருக்கு சச்சின் டெண்டுல்கரை பற்றி தெரியும். அவர் களத்தில் இருந்தால் நிச்சயம் 50. 60, 70 முதல் 100 ரன்களை எடுத்துவிடுவார்.



    அவரைப்போல், மத்தியப்பிரதேசத்தின் முதல் மந்திரி தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதுவரை 21 ஆயிரத்துக்கு  மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதனால் என்ன பயன்? ஒன்றும் நடக்கவில்லை.

    மேலும், வேலை வாய்ப்பின்மை, பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஆகியவற்றில் மத்தியப்பிரதேசம் முதல் இடம் வகித்து வருகிறது என குற்றம் சாட்டினார். #RahulGandhi #ShivrajSinghChouhan #SachinTendulkar
    காங்கிரஸ் தலைவரான ராகுலுக்கு மிளகாய் எப்படி வயல்வெளிகளில் விளைகிறது என தெரியுமா? என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார். #ShivrajSinghChouhan #RahulGandhi #Chilli
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள நர்சிங்கர்க் பகுதியில் நடைபெற்ற பேரணியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் தலைநகரான போபாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்தார். அவர் 15 கிலோ மீட்டருக்கு சாலை வழியாக சென்று மக்களை சந்தித்துள்ளார். 

    ஆனால், அவருக்கு வயல்வெளிகளில் மிளகாய் மேல்புறமாகவா அல்லது கீழாகவா எப்படி விளைகின்றது என தெரியுமா? 
    விவசாயம் பற்றி தெரியாதவர் அதை பற்றி அக்கறை கொள்ளலாமா?

    ராகுல்ஜி உங்கள் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு அதிகமாக 18 சதவீத வட்டியுடன் லோன்களை வழங்கி உள்ளீர்கள். நாங்களோ பூஜ்ய சதவீதத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார். #ShivrajSinghChouhan #RahulGandhi #Chilli
    மத்தியப்பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் கருப்பு துப்பட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்த்தால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChauhan #BlackScarves
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
    அங்குள்ள பெடுல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முல்டாய் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ  வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் கருப்பு துப்பாட்டாக்களை அணிந்திருந்ததை பார்த்த பெண் போலீசார், அவர்களிடம் இருந்த் துப்பட்டாக்களை நிகழ்ச்சி முடிந்ததும் தருவதாக கூறி வாங்கி வைத்துள்ளனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.



    முதல் மந்திரி பேசும்போது கருப்பு கொடியாக பயன்படுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் போலீசார் துப்பாட்டாக்களை வாங்கி வைத்துள்ளனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    முதல் மந்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் துப்பட்டாக்களை போலீசார் வாங்கி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #ShivrajSinghChauhan #BlackScarves
    மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய நிகழ்வான உறியடி விழாவில் பங்கேற்றார். #Janmashtami #ShivrajSinghChouhan
    போபால்:

    கிருஷ்ண ஜெயந்தி அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய் பால் போன்ற பலவிதமான பண்டங்களை மக்கள் உண்ணுவார்கள். 

    பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையை உயரத்தில் கட்டித் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழா என்று அழைக்கிறோம். இதற்கிடையே, இந்தியா முழுவதும் கோகுலாஷ்டமி விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

    இந்நிலையில், ம.பி. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் போபால் நகரில் நடைபெற்ற உறியடி விழாவில் பங்கேற்றார். 
    அதில் அவர் கட்டப்பட்டிருந்த உறியை அடித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பகவான் கிருஷ்ணரின் அருள் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். கிருஷ்ணரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
     
    மாநில மக்களுக்கு எனது கோகுலாஷ்டமி விழாவுக்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிகரமாக இந்த விழாவை நடத்தி முடித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். #Janmashtami #ShivrajSinghChouhan
    மத்தியப்பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChouhan
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சிதி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பாதுகாப்பு படையினர் சூழ ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, சர்ஹட் தொகுதியில் அவரது வாகனம் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் கார் மீது கல்லை வீசினர். இதில் முதல் மந்திரி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதல் குறித்து மாநில பாஜகவினர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் தொகுதியில் முதல் மந்திரியை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது என தெரிவித்தனர். ஆனால், பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிர்க் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல் வீசியதால பரபரப்பு ஏற்பட்டது. #ShivrajSinghChouhan
    ×